கடலுக்குள் கேமரா உதவியுடன் நடைபெறும் பாம்பன் ரெயில் பாலத்தின் உறுதித்தன்மை ஆய்வுப்பணி ஒரு வாரத்தில் முடியும் - அதிகாரி தகவல்
பாம்பன் ரெயில் பாலத்தின் உறுதித்தன்மை குறித்து கடலுக்குள் கேமரா உதவியுடன் ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு வாரத்தில் பணி முடியும் என்று அதிகாரி கூறினார்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் தீவை மண்டபத்துடன் இணைப்பதில் பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. 104 ஆண்டுகளை கடந்துள்ள இந்த ரெயில் பாலம் வழியாக ராமேசுவரத்துக்கு தினமும் சென்னை, மதுரை, திருச்சி, திருப்பதி, கன்னியாகுமரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும், வட மாநிலங்களில் இருந்தும் ரெயில்கள் வந்து செல்கின்றன. மிகவும் பழமையான பாலமாக உள்ளதாலும், பெரிய படகுகள், கப்பல்கள் பாலத்தை கடக்க வரும்போது அதன் மையப்பகுதியில் உள்ள தூக்குபாலத்தை திறந்து மூடுவதில் மிகுந்த சிரமம் உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தற்போதுள்ள பாலத்தின் அருகிலேயே சுமார் 20 மீட்டர் தூரத்தில் வடக்கு கடல் பகுதியில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். புதிதாக கட்டப்பட உள்ள ரெயில் பாலம் தற்போதுள்ள பாலத்தை காட்டிலும் கூடுதல் உயரத்துடன் அமைக்கப்பட உள்ளது. மேலும் அதன் மையப்பகுதியில் கப்பல்கள், பெரிய படகுகள் சென்று வர ஏதுவாக மின் மோட்டார் மூலம் திறந்து மூடும் வகையில் தூக்குபாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய ரெயில் பாலத்துக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பணிகள் முடிவடைய 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலும் ஆகலாம் என கருதப்படுகிறது.
இந்த நிலையில் பாம்பனில் புதிய ரெயில் பாலம் கட்டி முடிக்கும் வரையிலும் தற்போதுள்ள பாலத்தை ரெயில்வே துறையினர் பராமரித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பாலத்தை தாங்கி நிற்கும் 145 தூண்களிலும் அதன் உறுதித்தன்மை மற்றும் கடலுக்கு அடியில் தூண்களில் ஏதேனும் பாதிப்புகள் உள்ளனவா? என்பது குறித்து ஆய்வு செய்யும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆய்வு பணியில் கன்னியாகுமரியில் உள்ள தனியார் நிறுவனத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட பொறியாளர் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் கயிறு கட்டிக்கொண்டு தண்ணீருக்குள் மூழ்கி தூணின் அடிப்பகுதியில் கேமராவை பயன்படுத்தி படமெடுத்து ஒவ்வொரு தூணிலும் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த கேமராவில் பதிவாகும் காட்சிகள் அனைத்தும் ரெயில்வே பாலத்தில் வைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படுகிறது.
இதுபற்றி ரெயில்வே அதிகாரி கூறியதாவது:-
பாம்பன் ரெயில் பாலத்தில் உள்ள 145 தூண்களையும் ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 100 தூண்களில் ஆய்வு பணி நிறைவடைந்துள்ளது.
இதில் ஒரு சில தூண்களில் உப்பு காற்று மற்றும் கடல் நீரோட்டத்தால் லேசான பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. மற்ற தூண்களிலும் இதுபற்றி ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் பணிகள் முழுமையாக முடிவடையும். அதன் பின்னர் பாதிக்கப்பட்டுள்ள தூண்களில் ரசாயனம் கலந்த பவுடர் மூலம் கீறல் மற்றும் பாதிப்புகள் சரி செய்யும் பணி தொடங்கும்.
புதிய பாலம் கட்டி முடிக்கும் வரை தற்போதுள்ள பாலத்தில் ரெயில் போக்குவரத்து தொடர்ந்து நடைபெறும். கடலுக்குள் உள்ள தூண்கள் அனைத்துமே பாதுகாப்பாக உறுதித்தன்மையுடன் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story