மேல்முறையீட்டு மனு விசாரணையின்போது ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு சம்மன் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
குற்றவியல் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆஜராக வேண்டும். தவறினால் சம்மன் அனுப்பப்படும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
கொலை வழக்குகளில் கீழ்கோர்ட்டு அளிக்கும் தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்கின்றனர். அதேபோல பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படும் பட்சத்தில், இந்த உத்தரவை எதிர்த்து போலீசாரும் மேல்முறையீடு செய்வது வழக்கம்.
இதுபோன்ற வழக்குகள் ஐகோர்ட்டுகளில் விசாரணைக்கு வரும்போது, சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை அதிகாரி கோர்ட்டில் ஆஜராகி அரசு வக்கீலுக்கு தேவைப்படும் தகவல்களை கொடுக்க வேண்டும் என்பது நடைமுறையாக இருந்தது.
சமீபகாலமாக, இந்த வழக்கு விசாரணையின்போது, வழக்கு விவரங்கள் எதுவும் அறியாத சப்-இன்ஸ்பெக்டரோ, தலைமை காவலரோ பெயரளவுக்கு ஆஜராகி வருகின்றனர். அவர்களால் வழக்கு விவரங்களை தெளிவுபடுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் விசாரணை பாதிக்கப்படுகிறது.
இதை தவிர்க்க, குற்றவியல் மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணைக்கு சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராக வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் வைத்தியநாதன், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் நேற்று உத்தரவிட்டனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவில் “சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை ஐகோர்ட்டுகளில் குற்றவியல் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையின்போது சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியான போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராக வேண்டும். தவறும்பட்சத்தில் நேரில் ஆஜராகுமாறு கோர்ட்டில் இருந்து சம்மன் அனுப்பப்படும். இந்த உத்தரவை காவல்துறை உயர் அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

Related Tags :
Next Story