கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவையில் 1000 லாரிகள் இன்று ஓடாது - லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு
புதுவையில் இன்று (வியாழக்கிழமை) 1000 லாரிகள் ஓடாது என மாநில லாரி உரிமையாளர்கள் சங்க செயலாளர் குமார் கூறினார்.
புதுச்சேரி,
மத்திய அரசு சமீபத்தில் சாலை விதிகளை மீறுபவர்களுக்கான அபராத தொகையை அதிகமாக உயர்த்தி உள்ளது. இதை மறுபரிசீலனை செய்து குறைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் இன்று (வியாழக் கிழமை) ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது.
இந்த போராட்டத்திற்கு புதுவை மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு அளித்துள்ளது.
இது குறித்து சங்கத்தின் செயலாளர் குமார் கூறியதாவது:-
அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அறிவிப்பின்படி புதுவையில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதையொட்டி புதுவையில் சுமார் 1000 லாரிகள் ஓடாது. மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி அபராதம் அதிக அளவில் விதிக்கப்படுகிறது. இதனால் லாரி தொழிலே நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதனை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story