பத்திரப்பதிவில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க ஆலோசனை கூட்டம்; நாராயணசாமி தலைமையில் நடந்தது


பத்திரப்பதிவில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க ஆலோசனை கூட்டம்; நாராயணசாமி தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 19 Sept 2019 5:00 AM IST (Updated: 19 Sept 2019 4:50 AM IST)
t-max-icont-min-icon

பத்திரப்பதிவில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

புதுச்சேரி,

புதுவையில் வீட்டுமனைகளை பத்திரப்பதிவு செய்வதில் பிரச்சினைகள் உள்ளதாகவும், அங்கீகாரம் தொடர்பான விதிமுறைகள் கடுமையாக உள்ளதால் சிரமம் ஏற்படுவதாகவும், பக்கத்து மாநிலங்களில் இத்தகைய நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சட்டமன்ற கூட்டத்தின்போது எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்தனர்.

புதுவையில் உள்ள விதிமுறைகளை தளர்த்தி பத்திரப்பதிவு முறைகளை எளிதாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். தற்போதுள்ள நடைமுறைகளால் வீட்டுமனைகள் வாங்குபவர்கள் சிரமம் அடைந்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்கள்.

இதைத்தொடர்ந்து விதிமுறைகளை எளிதாக்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், கமலக்கண்ணன், அரசு செயலாளர்கள் அசோக்குமார், அர்ஜுன் சர்மா மற்றும் பத்திரப்பதிவு, நகரமைப்பு குழுமம், வேளாண்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது மனைகளை வரன்முறை படுத்துவதற்காக ஒருமுறை செயல்படுத்தும் திட்டத்தை அமல்படுத்துவது, தமிழகத்தை பின்பற்றி பத்திரப்பதிவுகளை மேற்கொள்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

Next Story