அ.தி.மு.க.வில் இருந்து சென்றவர்கள் தான் தி.மு.க.வை வழி நடத்துகின்றனர் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேச்சு
அ.தி.மு.க.வில் இருந்து சென்றவர்கள் தான் தி.மு.க.வை வழி நடத்துகின்றனர் என்று வேதாரண்யம் அருகே நடந்த அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
வேதாரண்யம்,
வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி தெற்கு கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிரிதரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் எழிலரசு வரவேற்றார். கூட்டத்தில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறிய
தாவது:-
தொழில் வளர்ச்சியிலும், சட்டம் ஒழுங்கிலும் முதன்மையான மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. தி.மு.க. ஆட்சி காலத்தில் கடுமையான மின்வெட்டு இருந்தது. தற்போது தமிழகம் மின் மிகை மாநிலமாக திகழ்கிறது. தி.மு.க. தடுமாற்றத்தில் உள்ளது. அ.தி. மு.க.வில் இருந்து சென்றவர்கள் தான் தி.மு.க.வை தற்போது வழி நடத்தி வருகின்றனர். இனிவரும் காலங்களில் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைக்க முடியாது.
மத்திய அரசு தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க முயற்சிக்கிறது எனவும், அதை முதல்-அமைச்சர் வேடிக்கை பார்க்கிறார் எனவும் பேசி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார். அ.தி.மு.க.வில் யார் வேண்டுமானாலும் தலைமை பதவிக்கு வரமுடியும். ஆனால் தி.மு.க.வில் ஸ்டாலின், உதயநிதிஸ்டாலின் ஆகியோர் தான் பதவிக்கு வர முடியும். அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும் வகையில் ஜெயலலிதா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தலைஞாயிறு ஒன்றிய செயலாளர் அவை பாலசுப்பிரமணியன். பேரூர் கழக செயலாளர் சவுரிராஜன் தலைமை கழக பேச்சாளர்கள் நெத்தியடி நாகையன், மதுரை ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் சண்முகராசன், கூட்டுறவு சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், அபிமன்னன் மாவட்ட எம்.ஜி.ஆர் அணி செயலாளர் திலீபன் மற்றும் ஒன்றிய, நகர, பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story