அரசு பஸ்களில் 1,038 பேர் ‘ஓசி’ பயணம்; ரூ.2¼ லட்சம் அபராதம் வசூல் - போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தகவல்


அரசு பஸ்களில் 1,038 பேர் ‘ஓசி’ பயணம்; ரூ.2¼ லட்சம் அபராதம் வசூல் - போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 20 Sept 2019 3:30 AM IST (Updated: 20 Sept 2019 12:38 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ்களில் ஓசி பயணம் செய்த 1,038 பேரிடம்ரூ.2¼ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோவை மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோவை,

சென்னைக்குஅடுத்தபடியாக கோவைநகரில் பழையபஸ்களுக்கு பதிலாக50 புதிய பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது. புதிய பஸ்சின் பின்புறம் ‘ஏர்சஸ்பென்சன்’ பொருத்தப்பட்டுள்ளது. இதனால் பஸ் எந்தவித அதிர்வும் இன்றி இயங்குவதால் பயணிகள்சோர்வின்றி பயணம்செய்ய ஏதுவாக இருக்கும்.இந்த பஸ்களில்நல்ல இடவசதியும், அகலமான இருக்கைகளும், மாற்றுத்திறனாளிகளுக்குஎன சிறப்புஇருக்கைகளும் அவர்களுடைய ஊன்றுகோல்களை வைக்க போதிய இடவசதியும் செய்யப்பட்டுள்ளது.

பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளிடம் டிக்கெட்பெற்று பயணம்மேற்கொள்வது குறித்துவிழிப்புணர்வு ஏற்படுத்தவும்,போக்குவரத்து கழகங்களுக்குஏற்படும் வருவாய்இழப்புகளை தவிர்க்கவும்தமிழ்நாடுஅரசு போக்குவரத்து கழகம்சார்பில் கோவை, ஈரோடு, திருப்பூர், ஊட்டி ஆகிய 4 மண்டலங்களில் டிக்கெட்பரிசோதகர்களை கொண்டு தினமும்சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல்அரசு போக்குவரத்துகழகஅலுவலர்கள் மூலமும் தணிக்கையாளர்களுடன்பகுதிவாரியாகபிரித்து சோதனைகள்நடத்தப்பட்டு வருகிறது.

முக்கிய விழாக்கள், விசேஷ நாட்களிலும்அலுவலக பணியாளர்களைகொண்டு முக்கிய நிறுத்தங்களில் இறங்கும் பயணிகளிடம்பயணச்சீட்டு பரிசோதனைகள்மேற்கொள்ளப்படுகிறது. ஜூலை மாதம் 28-ந்தேதிமுதல் கடந்த 16-ந்தேதிவரைநடைபெற்றஇந்த சோதனையில்சரக்கு கட்டணம்செலுத்தாமலும், பயணச்சீட்டு இன்றியும் ‘ஓசி’ பயணம் செய்த பயணிகளிடம் மோட்டார்வாகன சட்டப்படிஅதிகபட்சமாகரூ.500 வரை அபராதம் வசூலிக்கப்பட்டது.

இவ்வாறு டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 1,038 பயணிகளிடம் இருந்துரூ2¼ லட்சம் அபராததொகையாகவசூலிக்கப்பட்டது.அரசு பஸ்களில்பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் மற்றும்சரக்கு கட்டணம்முறையாக செலுத்தி பயணம்செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story