மாவட்ட செய்திகள்

பாளையங்கோட்டையில் வக்கீல்கள் சாலை மறியல் + "||" + In Playankottai Lawyers pick up the road

பாளையங்கோட்டையில் வக்கீல்கள் சாலை மறியல்

பாளையங்கோட்டையில் வக்கீல்கள் சாலை மறியல்
பாளையங்கோட்டையில் காங்கிரஸ் வக்கீல்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை,

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவதூறாக பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வக்கீல் அணியினர் நேற்று பாளையங்கோட்டையில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வக்கீல் அணி மாநில துணை தலைவர் ராமேசுவரன் தலைமையில் வக்கீல்கள் திரண்டு கோர்ட்டு முன்பு உள்ள திருச்செந்தூர்- தூத்துக்குடி சாலைக்கு வந்தனர். அங்கு அவர்கள் திடீர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது கோர்ட்டு வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாயகம் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து வக்கீல்கள் மறியலை கைவிட்டு, சாலையோரத்தில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் நெல்லை மாநகர் மாவட்ட வக்கீல் அணி தலைவர் மணிகண்டன், காங்கிரஸ் கட்சி வக்கீல்கள் பொன்.ராஜேந்திரன், எஸ்.பி.வி.பால்ராஜ், பிரம்மா, மேத்தா மைதீன், மரியகுழந்தை, அப்துல் நிஜாம், அருண், பழனி, தமிழ்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வடலூரை புனித நகரமாக அறிவிக்க கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலை மறியல்; 200 பேர் கைது
வடலூரை புனித நகரமாக அறிவிக்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. வேடசந்தூர் அருகே, சாமி சிலைகள் திருட்டை கண்டித்து பொதுமக்கள் மறியல்
வேடசந்தூர் அருகே விநாயகர் சிலைகள் திருட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. தலைவாசல் அருகே, மயான வசதி வேண்டி பெண் பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியல்
தலைவாசல் அருகே மயான வசதி கேட்டு பெண் பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
4. விருத்தாசலத்தில், மடிக்கணினி கேட்டு மாணவர்கள் சாலை மறியல்
விருத்தாசலத்தில் மடிக்கணினி கேட்டு மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5. பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு கால்நடைகளுடன் பொது மக்கள் சாலை மறியல்
பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு கால்நடைகளுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.