தூத்துக்குடி மாவட்டத்தில், சிறப்பாக பணியாற்றிய 53 போலீசாருக்கு பரிசு - நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 53 போலீசாருக்கு நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு பரிசு வழங்கினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன்குமார் அபிநபு தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்பாலகோபாலன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
பழைய குற்றவாளிகளின் பட்டியல் தயார் செய்து, அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து தீவிர நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய 53 போலீசாருக்கு டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு பரிசு வழங்கி பாராட்டினார்.
கூட்டத்தில் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரகாஷ், கலைக்கதிரவன், சுரேஷ்குமார், பால்துரை, நாகராஜன், ஜெயச்சந்திரன், ஜெபராஜ், பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர், பிரதாபன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் உமையொருபாகம், கிறிஸ்டி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story