படப்பை அருகே வாலிபரை மிரட்டி ரூ.2 லட்சம் பறிப்பு 9 பேருக்கு வலைவீச்சு
படப்பை அருகே வாலிபரை மிரட்டி ரூ.2 லட்சம் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் பாரதி நகர் ஏரியில் மணல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு மணல் அள்ள வரும் லாரிகளுக்கு டோக்கன் போட்டு பணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருபவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் (வயது 28).
கடந்த 17-ந்தேதி பணம் வசூலித்து கொண்டிருந்த அவரை 3 மோட்டார் சைக்கிள்களில் கத்தி மற்றும் அரிவாளுடன் வந்த 9 பேர் கொண்ட கும்பல் மிரட்டி அவரிடம் இருந்த ரூ.2 லட்சத்தை பறித்தனர்.
வலைவீச்சு
இதை பார்த்த லட்சுமணனுடன் பணிபுரியும் சக ஊழியர்களான கோபிநாத் (28,) ரமேஷ் (27) ஆகியோர் அவர்களை பிடிக்க முயன்றனர். அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். இது குறித்து மணிமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற 9 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story