கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை


கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 Sept 2019 3:30 AM IST (Updated: 20 Sept 2019 2:43 AM IST)
t-max-icont-min-icon

கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பூந்தமல்லி,

சென்னை அரும்பாக்கம், ஜெகநாதன் நகர், 1-வது தெருவைச் சேர்ந்தவர் சுடரொலி. இவருடைய மகன் அரிகரன்(வயது 20). இவர், பச்சையப்பன் கல்லூரியில் படித்து வந்தார்.

நேற்று முன்தினம் கோயம்பேடு பஜனை கோவில் தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு வந்த அரிகரன், இரவில் அங்கேயே தங்கிவிட்டார். நேற்று காலை அரிகரனை எழுப்ப அவரது பாட்டி அறைக்குள் சென்றார்.

தூக்குப்போட்டு தற்கொலை

அங்கு அரிகரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அலறினார். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார், அரிகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

காரணம் என்ன?

நேற்று முன்தினம் இரவு அரிகரன், நீண்டநேரமாக யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாகவும், அதன்பிறகு அறைக்குள் சென்று தூங்க சென்றவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

எனவே மாணவர் அரிகரன், குடும்ப சூழ்நிலை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது நண்பர்களுடன் ஏற்பட்ட பிரச்சினையா? அல்லது காதல் விவகாரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தாரா? என அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் அரிகரன் பேசிய செல்போன் எண்களை வைத்து கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story