பாகனேரி அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்
பாகனேரியில் உள்ள அரசு பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் ஜெயகாந்தன் பரிசுகளை வழங்கினார்.
சிவகங்கை,
சிவகங்கையை அடுத்த பாகனேரியில் உள்ள அரசு மேல்நிலைபள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடந்தது. பாகனேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் தேவதாஸ் முன்னிலை வகித்தார். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரிட்டோ வரவேற்று பேசினார்.
விழாவில் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் 10, 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் முதல் இடங்களை பெற்ற மாணவர்களுக்கும், பெண்கள் உயர்நிலைபள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவிகளுக்கும் கலெக்டர் பரிசு வழங்கி பேசினார்.
விழாவில் மூர்த்தி, செந்தாமரை, ஆசிரியர்கள் ராஜாராம், சிங்காரம், ரத்தினம், உடையப்பன், ராமநாதன் உள்பட பலர் கலந்த கொண்டனர். பின்னர் பாகனேரியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தின் செயல்பாடுகளை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார்.
இதில் முதுநிலை ஆசிரியர் கணேசன் கடந்த ஆண்டு பள்ளியின் செயல்பாடுகள் குறித்து விவரித்தார். விழாவில் பாகனேரி கூட்டுறவு வங்கியின் தலைவர் தேவதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. முடிவில் ஆசிரியர் சார்லஸ் சுதந்திர பாரதி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story