தேவகோட்டையில் பயங்கரம்: கொடுக்கல்-வாங்கல் தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை
தேவகோட்டையில் கொடுக்கல்-வாங்கல் தகராறில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
தேவகோட்டை,
தேவகோட்டை சிவன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பட்டணம் அழகப்ப செட்டியார். இவரது மகன் சிவமணி அய்யப்பன் (வயது 33). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக முன் விரோதம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தகராறில் வினோத் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவமணி அய்யப்பனின் அண்ணன் கணேசனை வெட்டினார்.
இது குறித்து தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர். சிறையில் இருந்த அவர் சமீபத்தில் ஜமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் தேவகோட்டை திருப்பத்தூர் சாலையில் திரையரங்கு எதிரே உள்ள ஒரு ஓட்டலில் சிவமணி அய்யப்பன் தனது நண்பர் ஒருவருடன் சாப்பிட மோட்டார் சைக்கிளில் வந்தார்.அவர்களை பின் தொடர்ந்து சென்ற வினோத், சிவமணிஅய்யப்பனை மறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.
தகவல் அறிந்த தேவகோட்டை டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகளை பிடிக்க தேவகோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் மேற்பார்வையில் போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த கொலையில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என்பது பற்றியும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.கொலையுண்ட சிவமணி அய்யப்பனின் குடும்பத்தினர் தேவகோட்டை ராம்நகரில் உள்ள மிக பிரமாண்டமான அழகப்பா பார்க் இடத்தை அரசுக்கு இலவசமாக வழங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
Related Tags :
Next Story