மதுரையில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தவர் கைது


மதுரையில் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தவர் கைது
x
தினத்தந்தி 20 Sept 2019 10:59 AM IST (Updated: 20 Sept 2019 10:59 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் அனுமதியின்றி கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்தவர் கைது செய்யப்பட்டார்.

கோரிப்பாளையம்,

சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்ததில் 23 வயது இளம் பெண் சுபஸ்ரீ பரிதாபகரமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பேனர்களை அதிகாரிகள் அதிரடியாக அகற்றி வந்தனர்.

இந்நிலையில், மதுரை கோரிப்பாளையத்தில் காலமான ரவி என்பவருக்கு சீனிவாசன் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்துள்ளார். உரிய அனுமதி இல்லாமல் பேனர் வைத்ததால் அவரை போலீசார் கைது செய்தனர்.

Next Story