'தினத்தந்தி' செய்தி எதிரொலி: வாய்க்காலில் தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றம்


தினத்தந்தி செய்தி எதிரொலி: வாய்க்காலில் தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றம்
x
தினத்தந்தி 21 Sept 2019 4:00 AM IST (Updated: 20 Sept 2019 6:46 PM IST)
t-max-icont-min-icon

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக திட்டச்சேரி அருகே வாய்க்காலில் தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டன.

திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திட்டச்சேரி பீமா தைக்கால் தெரு வழியாக ஆலங்குடிச்சேரி வரை செல்லும் பாதையில் வாய்க்கால் உள்ளது. இப்பகுதியில் 100 - க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வாய்க்காலில் இருந்து 150- க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 

திட்டச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குளிப்பதற்கும், பல்வேறு தேவைகளுக்கும்  இந்த வாய்க்காலை பயன்படுத்தி வந்தனர்.  இந்த வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்பட்டு தேங்கி கிடந்தன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்றுநோய் பரவும் அபாயமும் இருந்தது.  சம்பந்தப்பட்ட துறையினர் வாய்க்காலில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த பகுதியில் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்த செய்தி Òதினத்தந்திÓ நாளிதழில் படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் நெடுஞ்செழியன் உத்தரவின்படி பணியாளர்கள் மூலம் வாய்க்காலில் தேங்கி கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டன.  உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Next Story