அறச்சலூர் அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை


அறச்சலூர் அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 21 Sept 2019 4:00 AM IST (Updated: 20 Sept 2019 10:56 PM IST)
t-max-icont-min-icon

அறச்சலூர் அருகே திருமணம் ஆகாத ஏக்கத்தில் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

அறச்சலூர்,

அறச்சலூர் அருகே உள்ள சில்லாங்காட்டுப்புதூரை சேர்ந்தவர் பொன்னுசாமி. அவருடைய மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 42). விவசாயி. திருமணம் ஆகாதவர். இவருக்கு சொந்தமான தோட்டம் ஊஞ்சக்காடு பகுதியில் உள்ளது. கிருஷ்ணமூர்த்தி தோட்ட வேலையை முடித்துவிட்டு தினமும் இரவில் வீடு திரும்பிவிடுவார். அதேபோல் நேற்று முன்தினம் தோட்டத்துக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

இதனால் உறவினர்கள் நேற்று காலை அவரை தேடி சென்று பார்த்தனர். அப்போது கிருஷ்ணமூர்த்தி தோட்டத்து வீட்டில் கயிற்றில் தூக்குப்போட்டு தொங்கி கொண்டிருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனே அவரை தூக்கில் இருந்து இறக்கி பார்த்தனர். அப்போது அவர் இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து உடனே அறச்சலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிருஷ்ணமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கிருஷ்ணமூர்த்தி திருமணம் ஆகாத ஏக்கத்தில் மனம் உடைந்து காணப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்’ என்பது தெரியவந்தது.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story