உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கை - மாநில தேர்தல் ஆணையர் ஆய்வு
உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கை தொடர்பாக ராமநாதபுரத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம்,
மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தலைமையில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கை குறித்து அனைத்து நிலை உள்ளாட்சி அமைப்புகள் சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் ராமநாதபுரத்தில் நடைபெற்றது. கலெக்டர் வீரராகவ ராவ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு முன்னேற்பாடு நடவடிக்கையாக வார்டு வரையறை மற்றும் வாக்குச்சாவடி வரையறை செய்யும் பணிகள் நடைபெற்றுள்ளன. இதுதொடர்பாக வாக்காளர்களிடம் இருந்து பெறப்பட்ட அனைத்து மனுக்களும் தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்காக வார்டு வாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் போதிய உள்கட்டமைப்பு வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இதுதவிர தேர்தல் பணிகளுக்காக தற்போது பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள படிவங்கள், வாக்குப்பெட்டிகள் ஆகியவற்றின் நிலை குறித்து முன்னெச்சரிக்கையாக அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். தேர்தல் பணிகளுக்கு தேவையான கூடுதல் வாக்குப்பெட்டிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், அத்தியாவசிய தளவாட பொருட்கள் ஆகியவை குறித்தும், வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள், பணியாளர்கள் எண்ணிக்கை குறித்தும் கணக்கீடு செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைதொடர்ந்து மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி மாவட்ட கருவூல அலுவலகம், ராமநாதபுரம் யூனியன் அலுவலகம் மற்றும் ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பாதுகாப்பு அறைகளில் முத்திரையிடப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ள தேர்தல் தொடர்பான படிவங்கள், வாக்குப்பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஹெட்சி லீமா அமாலினி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, வருவாய் கோட்டாட்சியர்கள் பரமக்குடி ராமன், ராமநாதபுரம் கோபு, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(உள்ளாட்சி தேர்தல்) கணேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கயல்விழி, மாவட்ட வழங்கல் அலுவலர் கிறிஸ்டோபர் ஆரோக்கியராஜ், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ராஜா உள்பட அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story