முத்துப்பேட்டை அருகே, காயத்துடன் தூக்கில் பால் வியாபாரி பிணம் கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை


முத்துப்பேட்டை அருகே, காயத்துடன் தூக்கில் பால் வியாபாரி பிணம் கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 Sept 2019 3:30 AM IST (Updated: 20 Sept 2019 11:16 PM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டை அருகே காயத்துடன் தூக்கில் பால் வியாபாரி பிணமாக தொங்கினார். இவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டை அருகே உள்ள செம்படவன்காடு காமராஜர் காலனியை சேர்ந்தவர் பாபு. இவருடைய மகன் ஆனஸ்ட்ராஜ் (வயது 21). பால் வியாபாரி. இந்தநிலையில் நேற்று காலை பால் வாங்குவதற்காக அப்பகுதியில் உள்ளவர்கள் ஆனஸ்ட்ராஜ் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அவர் தூக்கில் பிணமாக தொங்கி உள்ளார். காலில் காயம் இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த முத்துப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆனஸ்ட்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆனஸ்ட்ராஜ் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப் பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story