பாளையங்கோட்டையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


பாளையங்கோட்டையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Sep 2019 10:00 PM GMT (Updated: 20 Sep 2019 8:30 PM GMT)

பாளையங்கோட்டையில் வக்கீல்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை,

நெல்லை வக்கீல் சங்கம் சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரி முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வக்கீல் சங்க தலைவர் சிவசூரிய நாராயணன் தலைமை தாங்கினார். செயலாளர் செந்தில்குமார் வரவேற்று பேசினார். பொருளாளர் மாரியப்ப காந்தி வரவேற்று பேசினார்.

புதிதாக நீதிபதிகள் தேர்வு செய்யும் முறை குறித்து தற்போது வெளிவந்துள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அறிக்கையின் படி நீதிபதி தேர்வு எழுதுபவர்களுக்கு தமிழ் கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டியது இல்லை என்றும், நீதிபதியாக தேர்வு பெற்ற பின் பயிற்சி காலத்துக்குள் தமிழை கற்று கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்.

மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகளில் வக்கீல்களுக்கு எதிரான உத்தரவை திரும்ப பெற வேண்டும். மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலையிலுள்ள அனைத்து சுங்க சாவடிகளிலும் வக்கீல்களுக்கு சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

புதிதாக தேர்வு செய்யப்படும் நீதிபதிகள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வக்கீல்களாக பணியாற்றி இருக்க வேண்டும் என்ற விதியினை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் சங்க துணை தலைவர் மந்திரமூர்த்தி, துணை செயலாளர் மணிகண்டன், வக்கீல்கள் சிவகுமார், அமல்ராஜ், மரியகுழந்தை, பிரம்மா, பழனி, ரமே‌‌ஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story