மாவட்ட செய்திகள்

சென்னை புறநகர் பகுதியில் அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து திருடும் கும்பல் கைது; கிராமமே கொள்ளையில் ஈடுபட்டது அம்பலம் + "||" + Arrested gang of robbers in Chennai suburb

சென்னை புறநகர் பகுதியில் அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து திருடும் கும்பல் கைது; கிராமமே கொள்ளையில் ஈடுபட்டது அம்பலம்

சென்னை புறநகர் பகுதியில் அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து திருடும் கும்பல் கைது; கிராமமே கொள்ளையில் ஈடுபட்டது அம்பலம்
சென்னை புறநகர் பகுதியில் தனியாக அறை எடுத்து தங்குபவர்களை குறிவைத்து அதிகாலையில் வீடு புகுந்து திருடும் கும்பலை போலீசார் கைது செய்தனர். கிராமமே சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.
தாம்பரம்,

சென்னை கிண்டி, வேளச்சேரி, சேலையூர், சிட்லபாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தனியாகவும், நண்பர்களுடனும் சேர்ந்து அறை எடுத்து தங்கி சென்னையில் வேலை பார்த்து வருபவர்களின் வீடுகளில் அதிகாலை நேரங்களில் மடிக்கணினி, விலைஉயர்ந்த செல்போன்கள் மற்றும் பணம் திருட்டு போய் வந்தது.


தாம்பரம் இரும்புலியூரில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கிய கம்ப்யூட்டர் என்ஜினீயர் நிகாஸ் என்பவரது மடிக்கணினி, செல்போனும் திருடுபோனதாக அளித்த புகாரின்பேரில் தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் அசோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், கஜபதி மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர்.

நிகாஸ் வீட்டில் திருடுபோன செல்போன் ஐ.எம்.இ. நம்பரை வைத்து அதை பயன்படுத்தியவரை பிடித்து விசாரித்தனர். அதில் திருட்டில் ஈடுபட்ட ஒருவரது செல்போன் எண் கிடைத்தது. அந்த செல்போன் சிக்னலை வைத்து கிண்டியில் உள்ள விடுதியில் தங்கி இருந்த வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகா நய்யம்பட்டியை அடுத்த சங்கராபுரம் என்ற குக்கிராமத்தை சேர்ந்த சத்யராஜ்(22), ராமு(22), கார்த்திக்(26) உள்பட 4 பேரை கைது செய்தனர்.

குறிப்பிட்ட ஒரு பிரிவை சேர்ந்த இந்த கிராம மக்கள், கூட்டாக தமிழகம் முழுவதும் வேலைக்கு செல்வது போல் ஒவ்வொரு ஊராக சென்று ஓட்டல்களில் அறை எடுத்து தங்குவர். அதிகாலையில் அந்த பகுதியில் நோட்டமிடும் அவர்கள், வெளியில் கொடிகளில் காயபோடும் துணிகளை வைத்து தனியாக தங்கி இருப்பவர்களை கண்டுபிடித்து அந்த வீடுகளுக்குள் புகுந்து திருடுவது தெரிந்தது.

திருடிய பொருட்களை கும்பலில் உள்ள ஒருவரிடம் கொடுத்து கிராமத்திற்கு அனுப்பி விட்டு, அடுத்த இடத்தில் திருட்டை அரங்கேற்றுவார்கள் என்பது தெரிந்தது. கைதானவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினிகள், 14 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வீட்டில் பதுக்கிய ரூ.15 லட்சம் கடல் அட்டைகள் பறிமுதல்; 3 பேர் கைது
வீட்டில் பதுக்கிய ரூ.15 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்ததுடன், இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.
2. ரஞ்சன்குடிகோட்டை அருகே, மானை வேட்டையாடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது
ரஞ்சன்குடிகோட்டை அருகே மானை வேட்டையாடிய சிறுவன் உள்பட 2 பேரை கைது செய்த வனத்துறையினர் தப்பியோடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
3. போலி சொத்து பத்திரம் மூலம் வங்கியில் ரூ.50 லட்சம் மோசடி; முன்னாள் மேலாளர் கைது
மும்பை அந்தேரி வெர்சோவா பகுதியை சேர்ந்தவர் மார்தா டிசோசா. இவரது வீட்டிற்கு தேனா வங்கியில் இருந்து நோட்டீஸ் ஒன்று வந்தது. அந்த நோட்டீசில் தாங்கள் வாங்கிய ரூ.50 லட்சம் கடனை உடனடியாக திருப்பி செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வங்கிக்கு சென்று விசாரித்தார்.
4. தொழிலாளி கொலை வழக்கில் தந்தை-மகன்கள் உள்பட 6 பேர் கைது
ஓட்டப்பிடாரம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் தந்தை, மகன்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. வாகனங்களில் வருபவர்களை கொடூரமாக தாக்கி கைவரிசை: தஞ்சையில், முகமூடி கொள்ளை கும்பல் தலைவன் கைது
தஞ்சை புறவழிச்சாலை பகுதியில் வாகனங்களில் வருபவர்களை கொடூரமாக தாக்கி கைவரிசை காட்டி வந்த முகமூடி கொள்ளையன் கைது செய்யப்பட்டான். அவனிடம் இருந்து 10 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.