சட்டசபை தேர்தல்: காங்கிரஸ் கட்சிக்கு 5 மேலிட பொறுப்பாளர்கள் சோனியா காந்தி நியமித்தார்
சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சிக்கு 5 மேலிட பொறுப்பாளர்களை சோனியா காந்தி நியமித்து உள்ளார்.
மும்பை,
மராட்டிய சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள முக்கிய எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் வியூகம் அமைத்து வருகின்றன.
5 மேலிட பொறுப்பாளர்கள்
இந்த நிலையில் மராட்டிய சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் சார்பில் 5 மேலிட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். காங்கிரஸ் பொது செயலாளர் முகுல் வாஷ்னிக், அவினாஷ் பாண்டே, ரஞ்சித் பாட்டீல், ஆர்.சி.குந்தியா மற்றும் ராஜீவ் சதவ் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இதில் விதர்பா மண்டல பொறுப்பாளராக முகுல் வாஷ்னிக்கும், மும்பை மண்டல மற்றும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை பொறுப்பாளராக அவினாஷ் பாண்டேவும், மேற்கு மற்றும் கொங்கன் மண்டல பொறுப்பாளராக ரஞ்சித் பாட்டீலும், வடக்கு மராட்டிய மண்டல பொறுப்பாளராக ஆர்.சி.குந்தியாவும் மற்றும் மரத்வாடா மண்டல பொறுப்பாளராக ராஜீவ் சதவும் பணியாற்ற உள்ளனர்.
இந்த நியமனத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செய்திருப்பதாக, கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story