கோபி அருகே பயங்கரம்; இரும்பு கம்பியால் தாக்கி டிரைவர் படுகொலை


கோபி அருகே பயங்கரம்; இரும்பு கம்பியால் தாக்கி டிரைவர் படுகொலை
x
தினத்தந்தி 22 Sept 2019 4:30 AM IST (Updated: 22 Sept 2019 12:14 AM IST)
t-max-icont-min-icon

கோபி அருகே இரும்பு கம்பியால் தாக்கி டிரைவர் படுகொலை செய்யப்பட்டார்.

கடத்தூர்,

கோபி அருகே உள்ள அவ்வையார்பாளையம் காமராஜர் வீதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் விஜயகுமார் (வயது 35). ரிக் லாரி டிரைவர். இதேபோல் அதே பகுதியை சேர்ந்தவர் மணிமோகன் (47). விவசாயி. விஜயகுமாருக்கும், மணிமோகனுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை விஜயகுமார் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகில் நின்று கொண்டிருந்தார். அங்கு மணிமோகன் மற்றும் சிலர் வந்தனர். அப்போது விஜயகுமாருக்கும், மணிமோகனுக்கும் திடீரென தகராறு ஏற்பட்டு உள்ளது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த மணிமோகனும், அவருடன் வந்தவர்களும் சேர்ந்து விஜயகுமாரை இரும்பு கம்பி மற்றும் கம்பால் தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். அவர்கள் தாக்கியதில் விஜயகுமார் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி அறிந்ததும் கோபி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விஜயகுமாரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கொலை செய்தவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த கொலை சம்பவம் கோபி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story