சங்கராபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிட பணியை முதன்மை நீதிபதி ஆய்வு
சங்கராபுரத்தில் நடந்து வரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிட பணியை முதன்மை நீதிபதி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சங்கராபுரம்,
சங்கராபுரத்தில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆகியவை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதையடுத்து நீதிமன்றத்துக்கு சொந்த கட்டிடம் கட்ட அரசு முடிவு செய்தது. அதன்படி ரூ.8 கோடியே 28 லட்சம் மதிப்பில் சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தின் பின்புறத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த கட்டிட பணிகளை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் பணிகளை நல்ல தரத்துடன் உரிய காலத்துக்குள் செய்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட உரிமையியல் நீதிபதி பாஸ்கரன், குற்றவியல் மாஜிஸ்திரேட்டு ராஜசேகர், தாசில்தார் வாசுதேவன், அரசு வக்கீல் தாமரைசெல்வன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவுதமன், வக்கீல் சங்க தலைவர் தனசேகரன், வக்கீல்கள் திருநாவுக்கரவுசு, ரமேஷ்குமார், முருகன், பாண்டுரங்கன், செந்திலரசு,, அன்சாரி, சத்யமூர்த்தி, அசோக்குமார், குமார், சிரஞ்சீவி, ராஜ்குமார், வருவாய் ஆய்வாளர் தேவதாஸ், உள்பட பலர் உடன் இருந்தனர்.
முன்னதாக தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வருடாந்திர ஆய்வு பணியை மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி மேற்கொண்டார்.
Related Tags :
Next Story