பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்


பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 22 Sept 2019 4:30 AM IST (Updated: 22 Sept 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று குற்ற தடுப்பு போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நிலுவையில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பழனிகுமார் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.

கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிச்சந்திரன், அன்பழகன், முருகேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாதுரை, ஸ்ரீகாந்த் மற்றும் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

குற்றப்பத்திரிகை

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பழனிகுமார் பேசுகையில், மூன்று மாவட்டங்களிலும் நிலுவையில் உள்ள குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்த வழக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வழக்குகளை விரைவாக விசாரணை முடித்து குற்றப்பத்திரிகையை 60 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

குற்றவாளிகள் மீது விரைந்து கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்தும் குற்ற வழக்குகளில் அறிவியல் ரீதியான தடயங்களை சேகரித்து வழக்கு விசாரணையை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

Next Story