தாராபுரத்தில் மேம்பாலம் கட்டும் பணி மும்முரம்; தற்காலிகமாக போக்குவரத்தை மாற்றம் செய்ய அதிகாரிகள் ஆய்வு
தாராபுரத்தில் மேம்பாலம் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதை தொடர்ந்து தற்காலிகமாக போக்குவரத்தை மாற்றம் செய்ய அதிகாரிகள் ஆய்வு நடத்தினார்கள்.
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம் அவினாசிபாளையத்தில் இருந்து தாராபுரம் வழியாக ஒட்டன்சத்திரம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் தாராபுரம் பகுதியில் நஞ்சியம்பாளையம் அருகே உள்ள உப்பாற்றின் குறுக்கே கூடுதலாக ஒரு பாலமும், புறவழிச்சாலையில் பஸ் நிலையம் முன்பு மேம்பாலமும், அமராவதி ஆற்றின் குறுக்கே கூடுதலாக ஒரு பாலமும் கட்டப்பட்டு வருகிறது. பஸ் நிலையம் முன்பு கடந்த மார்ச் மாதம் மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. அதன் பிறகு கடந்த 6 மாதமாக மேம்பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
இதுவரை மொத்தம் 28 கான்கிரீட் தூண்கள் கட்டப்பட்டுள்ளது. மேம்பாலம் கட்டும் பணி மும்முரமாக நடந்து வருவதால் கடந்த 6 மாதமாக பஸ் நிலையம் முன்பு, போக்குவரத்துக்கு பெரிய அளவில் இடையூறு ஏற்படவில்லை. அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும். உடனே அது சரிசெய்யப்பட்டு விடும். குறிப்பாக மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும். இதனால் பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள்.
ஆற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய பாலங்களால், போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படுவதில்லை. மேம்பாலப் பணியைப் பொறுத்தவரை, இனிமேல் தூண்களை இணைக்கும் பணிகள் நடைபெறவுள்ளது. இதற்காக தூண்கள் உள்ள பகுதியைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகம் தேவைப்படுகிறது. தற்போது போக்குவரத்திற்காக, தூண்களின் இருபுறமும் ஒதுக்கப்பட்டுள்ள பாதையில், ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய அளவிற்கு இடவசதி உள்ளது. இந்த சாலையை இதற்கு மேல் விரிவுபடுத்த முடியாது.
இந்த நிலையில் தற்போதுள்ள சாலையை ஆக்கிரமித்துதான் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடியும். எனவே இனி வரும் காலங்களில் மேம்பாலம் கட்டும் பகுதியில், போக்குவரத்தை தடை செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. அவ்வாறு தடை செய்யும் பட்சத்தில், பஸ் நிலையத்திற்கு பஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்படலாம். அதனால் பஸ் நிலையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யவும் வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பஸ் நிலையம் முன்பு போக்குவரத்துக்கு தடை ஏற்படும் போது, ஒட்டன்சத்திரம், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களிலிருந்தும், பழனியிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும், திருப்பூர், ஈரோடு, கோவை, சத்தியமங்கலம், கோபி ஆகிய பகுதிகளுக்குச் செல்ல வேண்டும் என்றால், கொட்டாப்புளிபாளையம் ரோட்டில் சென்று, அங்கிருந்து பிரிந்து பொள்ளாச்சி சாலையை அடைந்து அதன் பிறகு சகுனிபாளையம் ரோட்டின் வழியாகச் சென்று, புறவழிச்சாலையை அடையவும், திருப்பூர், கோவை, ஈரோடு, சத்தியமங்கலம், கோபி ஆகிய பகுதிகளிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் அனைத்தும், அமராவதி சிலைக்கு முன்பு பிரிந்து, நகர்பகுதிக்குள் சென்று, அண்ணாநகர் வழியாக கொட்டாப்புளிபாளையம் ரோட்டை அடைந்து, பிறகு புறவழிச்சாலை வழியாக அந்தந்த ஊர்களுக்குச் செல்வதற்கு, பாதை வசதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.விரைவில் இது குறித்து முழு விவரங்களை அதிகாரிகள் வெளியிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகளும். பொது மக்களும் இது குறித்து எந்தவித குழப்பமும் அடையவேண்டாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Tags :
Next Story