வேதாரண்யம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு


வேதாரண்யம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் கலெக்டர் சுரேஷ்குமார் ஆய்வு
x
தினத்தந்தி 21 Sep 2019 11:00 PM GMT (Updated: 21 Sep 2019 8:50 PM GMT)

வேதாரண்யம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம், கரியாப்பட்டினம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.69 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிள்ளையார் கோவில் குளம் தூர்வாரும் பணிகளையும், வேதாரண்யம்், குரவப்புலம் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சிகள் துறை சார்பில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.165.47 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் குரவப்புலம் முதல் கருப்பம்புலம் வரை சாலை மேம்பாட்டுப் பணிகளையும் கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சாலை சீரமைக்கும் பணி

இதை தொடர்ந்து வேதாரண்யம், கருப்பம்புலம் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சிகள் துறை சார்பில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.98 லட்சம் மதிப்பீட்டில் கருப்பம்புலம் நடுக்காடு முதல் வடக்காடு வரையிலான சாலை சீரமைக்கும் பணிகளையும், செம்போடை வடக்கு பகுதியில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் ஒன்றாங்குளம் தூர்வாரும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன், கஸ்தூரி, உதவி செயற்பொறியாளர்கள் திருமணிமாறன், பாலசுந்தர், தாசில்தார் சண்முகம் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story