நீர் மேலாண்மை இயக்கத்தை செயல்படுத்துவதில் தமிழகத்தில், தஞ்சை மாவட்டம் முதலிடம்


நீர் மேலாண்மை இயக்கத்தை செயல்படுத்துவதில் தமிழகத்தில், தஞ்சை மாவட்டம் முதலிடம்
x
தினத்தந்தி 22 Sept 2019 4:30 AM IST (Updated: 22 Sept 2019 2:55 AM IST)
t-max-icont-min-icon

நீர் மேலாண்மை இயக்கத்தை செயல்படுத்துவதில் தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது என்று மத்திய ஆய்வுக்குழு தலைவர் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் நீர் மேலாண்மை இயக்கம் (ஜல்சக்தி அபியான்) தொடர்பான 3-வது கட்ட ஆய்வுக்கூட்டம் மத்திய ஆய்வுக்குழு தலைவர் பிரமோத் குமார்பதக் தலைமையில் நடைபெற்றது கலெக்டர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மத்திய ஆய்வுக்குழு தலைவர் பிரமோத் குமார் பதக் கூறியதாவது:-

நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் 90 சதவீத பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இந்திய அளவில் ஜல்சக்தி அபியான் இயக்க தரவரிசை பட்டியலில் தஞ்சை மாவட்டம் ஆறாவது இடத்திலும், தமிழ்நாடு அளவில் முதல் இடத்திலும் உள்ளது.

தஞ்சை முன்னோடியாக விளங்குகிறது

நீர் மேலாண்மை இயக்கத்தின் கீழ் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் இதர துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகள், மரக்கன்றுகள் நடுதல், மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல், காடுகள் வளர்த்தல் ஆகிய பணிகள் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டு உள்ளது. இதில் தஞ்சை மாவட்டம் பிற மாவட்டங்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. நீர் மேலாண்மை இயக்க திட்ட பணிகளின் மூலம் அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பணிகளை இதேபோன்று அனைத்துத்துறை அலுவலர்களும் மேலும் சிறப்பாக செய்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story