தேவாங்கர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் - கோவை மாநாட்டில் தீர்மானம்
தேவாங்கர் சமுதாயத்தை மிகவும்பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்சேர்க்க வேண்டும் என்று கோவை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோவை,
தமிழ்நாடுஅனைத்து தேவாங்கர்சமூக நல மாநாடுகோவை கொடிசியாமைதானத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்குதேவாங்கஜகத்குருஅறக்கட்டளை திருமூர்த்திமலை கிளை தலைவர்பதஞ்சலிஏ.எம்.சுப்பிரமணிசெட்டியார் தலைமை தாங்கினார். மாநாட்டுஇணை தலைவரும், அனைத்துஇந்திய தேவாங்கர்சவுடேஸ்வரிநற்பணிமன்றமாநில தலைவருமானஆர்.கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார்.கோவை சவுடேஸ்வரிஅறக்கட்டளை செயலாளர்ஆராதனா ராஜூ என்ற சுப்பிரமணியம்வரவேற்றார்.
ஹம்பிஹேமகூடஸ்ரீகாயத்ரிபீடமகாசமஸ்தானபீடாதிபதிமஹாராஜ்தயானந்தபுரி சுவாமிகள்கலந்து கொண்டு அருளாசி வழங்கினார். மாநாட்டில் அமைச்சர்கள்எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன்ஆகியோர் சிறப்புஅழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.
மாநாட்டில் அமைச்சர்எஸ்.பி.வேலுமணிகூறுகையில்,இந்திய பொருளாதாரத்தில்கைத்தறிமுக்கிய பங்குவகிக்கிறது. நெசவாளர்கள் கோரிக்கைகள் குறித்து மத்திய அரசின்கவனத்திற்கு கொண்டு செல்ல கைத்தறிதுறை அமைச்சர்ஓ.எஸ்.மணியன்அனைத்து உதவிகளையும் செய்வார். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும்கோவை கைத்தறிமற்றும்ஜவுளித்துறையில்சிறந்து விளங்குகிறது. 50 ஆண்டுகளில் இல்லாதஅளவு கோவைமாவட்டத்தில்வளர்ச்சி பணிகள்மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதேபோன்று நெசவாளர்களின் வளர்ச்சிக்காகஎடப்பாடி பழனிசாமி தலைமையிலானஅரசு பல்வேறுபணிகளை தொடர்ந்துசெய்யும் என்றார்.
தொடர்ந்து அமைச்சர்ஓ.எஸ்.மணியன்பேசும்போது, நெசவாளர்களின் கோரிக்கைகளை அமைச்சர்எஸ்.பி.வேலுமணிகண்டிப்பாக நிறைவேற்றுவார்.டிராபேக்வரிசலுகையைஉயர்த்தி தரவேண்டும் என மத்திய அரசிடம் கேட்டு இருக்கிறோம்.நெசவு தொழில்செய்யும் தொழிலாளர்களோடு இந்த அரசு எப்போதும் துணை நிற்கும்.மாநாட்டு தீர்மானங்களைமுதல்வரின் பார்வைக்குஎடுத்து சென்றுஅவற்றைநிறைவேற்றி தருவோம்என்றார்.
முன்னதாகஅமைச்சர்களுக்கு கிரீடம்அணிவிக்கப்பட்டு,நினைவு பரிசுகள்வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து மாநாட்டு மலர் வெளியிடப்பட்டது. தொடர்ந்துகே.கே.மதிவாணன்தேவாங்கர் வரலாறு என்ற தலைப்பிலும்,பி.எஸ்.மூர்த்திநெசவாளர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பிலும்,பி.கே.சண்முகம்கைத்தறி நெசவாளர்களின் வளர்ச்சி என்ற தலைப்பிலும் பேசினார்கள்.மாநாட்டு தீர்மானத்தைஐஸ்வா்யாமூர்த்தி வாசித்தார்.
மாநாட்டில் 18 வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-
தமிழக நெசவாளர்களுக்கு முற்றிலும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். தேவாங்கர் சமுதாயத்தை மிகவும்பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்சேர்க்க வேண்டும். அனைத்து நெசவாளர்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் அடையாள அட்டை வழங்குதல், நெசவாளர்களுக்கான இலவசமருத்துவ காப்பீட்டுதிட்டத்தில்ரூ.5 லட்சம் வரை வழங்குதல், 60 வயதுக்கு மேற்பட்டநெசவாளா்களுக்குஓய்வூதியமாக மாதம்ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.
கைத்தறியில் உற்பத்தியாகும் அனைத்து ஜவுளி ரகங்களுக்கும்ஜி.எஸ்.டி.யில்விலக்கு அளிக்க வேண்டும். நெசவு செய்யப்பட்ட பருத்தி மற்றும் இறக்குமதி செய்ய கட்டுப்பாடுகள் விதித்து இறக்குமதி வரியை உயர்த்த வேண்டும்.
மத்திய மாநில ஜவுளி அமைச்சகத்தின்கீழ்வரும்அனைத்துஆலோசனை குழுக்களிலும்தேவாங்கசமூக நெசவாளர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். சென்னை மாநகராட்சியின் முதல் மேயரானதேவாங்ககுலத்தை சேர்ந்ததியாகராயருக்குமணிமண்டபம்அமைக்க வேண்டும்.
ரிப்பன்மாளிகையை தியாகராயர்பெயரில் அழைக்க அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும். மேலும் அவருடையநினைவுப்படம்சட்டமன்ற வளாகத்தில் வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதையடுத்து குல ரத்னா,குல பூஷணாஉள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன. மேலும் கலை நிகழ்ச்சிகள், அன்னதானம், மகாஜோதிபுறப்பாடு நடந்தது. முடிவில்பி.கே.ஜெகநாதன்நன்றி கூறினார்.
மாநாட்டில் பா.ஜனதா தமிழக பொதுச்செயலாளர்வானதிசீனிவாசன், மேட்டுப்பாளையம்ஸ்ரீராமலிங்கசவுடேஸ்வரியம்மன்கோவில் தலைவர்என்.எஸ்.வி.ஆறுமுகம்,ஏ.புஷ்பா, மக்கள் தொடர்புஅதிகாரி சுபா சுப்பிரமணியன்மற்றும் கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், நீலகிரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தேவாங்கர் சமுதாயத்தினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story