மாவட்ட செய்திகள்

ஹெல்மெட் சோதனையில் இளம்பெண் படுகாயம்: மோட்டார் சைக்கிளை எரித்ததாக 7 பேர் கைது + "||" + Teenager injured in helmet test: motorbike burned 7 people Arrested

ஹெல்மெட் சோதனையில் இளம்பெண் படுகாயம்: மோட்டார் சைக்கிளை எரித்ததாக 7 பேர் கைது

ஹெல்மெட் சோதனையில் இளம்பெண் படுகாயம்: மோட்டார் சைக்கிளை எரித்ததாக 7 பேர் கைது
ஹெல்மெட் சோதனையின்போது இருசக்கர வாகனத்தில் இருந்து இளம்பெண் கீழே விழுந்து படுகாயம் அடைந்த வழக்கில் மோட்டார்சைக்கிளை எரித்ததாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரை சேர்ந்தவர் யுவனேஷ். இவருடைய மனைவி பிரியா(வயது 23). இவர், நேற்று முன்தினம் மாலை தனது தாயார் பிறந்த நாளையொட்டி கேக் வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் செங்குன்றம் அடுத்த கே.கே.நகரில் போலீஸ் உதவி மையம் அருகே செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார்.


அப்போது அங்கு ஹெல்மெட் சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார், ஹெல்மெட் அணியாமல் சென்ற பிரியாவை தடுத்தனர். இதில் பிரேக் பிடித்து நிறுத்திய பிரியா மீது செங்குன்றத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்ற லாரி மோதியது. நிலைதடுமாறி கீழே விழுந்த அவரது கால்களில் லாரி சக்கரம் ஏறி இறங்கியது இதில் படுகாயம் அடைந்த அவர், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரின் மோட்டார்சைக்கிளை தீ வைத்து எரித்ததுடன், விபத்துக்கு காரணமான லாரியின் கண்ணாடியை கல்வீசி நொறுக்கினர். மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இதுபற்றி சோழவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் வழக்குப்பதிவு செய்து கலவரத்தின்போது மோட்டார்சைக்கிளை எரித்ததாக அன்பு(23), சரவணன்(24), வின்சென்ட்(26), சுரேஷ்குமார்(24), கார்த்திக்(26), தீனதயாளன்(28), வேலாயுதம்(29) ஆகிய 7 பேரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. வீட்டில் விபசாரம் நடத்திய பெண்கள் உள்பட 4 பேர் கைது
பண்ருட்டியில் வீட்டில் விபசாரம் நடத்திய பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. திருக்கோவிலூர் அருகே வாலிபர் மீது தாக்குதல்; 2 பேர் கைது
திருக்கோவிலூர் அருகே உள்ள மேலத்தாழனூர் மதுரா சின்னசெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 35). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த அண்ணாதுரை மகன்கள் தங்கதுரை (29), கார்த்தி (27) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.
3. அரசு மருத்துவமனைக்குள் புகுந்து நண்பரை கொல்ல முயற்சி ; வாலிபர் கைது
திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து நண்பரை கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மிரட்டல்; 2 பேர் கைது
ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் அசோகன். சம்பவத்தன்று இவர் கல்லாவி அருகே கொல்லப்பட்டியில் ஊராட்சி தண்ணீர் தொட்டி அருகில் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார்.
5. தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறல்; 4.92 லட்சம் பேர் கைது
தமிழகத்தில் ஊரடங்கு விதிமீறலில் ஈடுபட்ட 4.92 லட்சம் பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.