சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் வாபஸ்; அரசு பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன
சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் வாபஸ் ஆன நிலையில் புதுவை அரசு பஸ்கள் நேற்று வழக்கம்போல் இயக்கப்பட்டன.
புதுச்சேரி,
புதுவை அரசின் சாலை போக்குவரத்து கழகத்தில் (பி.ஆர்.டி.சி.) பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் மற்றும் கடந்த ஆண்டிற்கான தீபாவளி போனஸ் தொகை வழங்கப்படாமல் இருந்து வந்தது.
இந்தநிலையில் நிலுவை சம்பளம், போனஸ் ஆகியவற்றை வழங்கக்கோரியும், 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 17-ந்தேதி முதல் சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்தனர்.
போராட்டத்தை தொடர்ந்து ஊழியர்களுக்கான நிலுவை சம்பளம், போனஸ் தொகை என மொத்தம் ரூ.5 கோடியே 80 லட்சம் அவரவர் வங்கிக்கணக்கில் நேற்று முன்தினம் செலுத்தப்பட்டது.
இருந்தபோதிலும் போராட்டத்தை கைவிட மறுத்த ஊழியர்கள் 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், ஒப்பந்த ஊழியர்களை தினக்கூலி ஊழியர்களாக மாற்றவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அதிகாரிகள் தொடர்ந்து முயற்சித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் காமராஜ் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்தது.
தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது இருக்கும் என்பதால் வேறுவழியின்றி ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்ற அவர்கள் நேற்று பிற்பகல் முதல் பஸ்களை இயக்க தொடங்கினார்கள். இதனால் 4 நாட்களாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

Related Tags :
Next Story