காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ்-அ.தி.மு.க. மோதல்?


காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ்-அ.தி.மு.க. மோதல்?
x
தினத்தந்தி 22 Sept 2019 4:30 AM IST (Updated: 22 Sept 2019 4:21 AM IST)
t-max-icont-min-icon

காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ்- அ.தி.மு.க. நேரடியாக மோதும் சூழல் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுவையில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது காங்கிரஸ்-தி.மு.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய கட்சிகள் தனித்தனியே போட்டியிட்டன.

ஆனால் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இணைந்திருந்தனர். எதிரணியில் கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தனித்தனியே போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதீய ஜனதா கட்சிகள் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்திருந்தன. அந்த கூட்டணியே இப்போதும் தொடரும் என்று தெரிகிறது.

தற்போது காமராஜ் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அ.தி. மு.க.-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் அ.தி.மு.க. போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. காமராஜ் நகர் தொகுதி கடந்த 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்போது உருவானது.

2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வைத்திலிங்கமே இந்த தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story