காட்பாடியில், ரூ.16½ கோடியில் மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி
காட்பாடியில் ரூ.16½ கோடியில் மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
காட்பாடி,
வேலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு மைதானம் இல்லை. இந்த நிலையில் கடந்தாண்டு ஊசூர் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, ரூ.15 கோடியே 73 லட்சம் ஒதுக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் பணிகள் இருந்ததால் மைதானம் அமைக்கும் பணி தொடங்கப்படவில்லை. இதற்கிடையே அரசாணை மாற்றி அமைக்கப்பட்டு பழைய காட்பாடி அருகே விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு சொந்தமான இடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க ரூ.16 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் விளையாட்டு மைதானத்தில் பார்வையாளர் அரங்கம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது.
இதனை விளையாட்டு மேம்பாட்டுத்துறை (கட்டிடம்) செயற்பொறியாளர் மணிவண்ணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், இந்த பணிகளை 10 மாதத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த விளையாட்டு மைதானத்தில் 400 மீட்டர் ஓடுதளம், கால்பந்து, வாலிபால், உடற்பயிற்சி கூடம், நீச்சல்குளம், விளையாட்டு அலுவலகம் ஆகியவை அமைய உள்ளது’ என்றார்.
ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம், உதவி செயற்பொறியாளர் பழனி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story