வெங்கல் அருகே மின்னல் தாக்கி பெண் சாவு


வெங்கல் அருகே மின்னல் தாக்கி பெண் சாவு
x
தினத்தந்தி 23 Sept 2019 3:30 AM IST (Updated: 23 Sept 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

வெங்கல் அருகே சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி, மின்னலுடன் 2 மணி நேரம் திடீரென பலத்த மழை பெய்தது.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள பேரத்தூர் கிராமம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி, மின்னலுடன் 2 மணி நேரம் திடீரென பலத்த மழை பெய்தது. இந்த நிலையில், பேரத்தூர் கிராமத்தில் வயல்வெளியில் கூலித் தொழிலாளிகள் 15 பேர் நடவு செய்யும் பணியை மேற்கொண்டு வந்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் பேரத்தூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர்களான அன்னபூரணி (வயது 45), முருகன்(35), உஷா (36), கலா (38), அற்புதம் (44), நாகம்மாள் (36), சின்ன பொண்ணு (45) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்கள் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் அன்னபூரணி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். முருகன் மற்றும் உஷா இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்துக்கு வெங்கல் போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story