போலி ஆவணங்கள் மூலம் இந்திய குடியுரிமை பெற்ற இலங்கை தமிழர் மீது வழக்கு
போலி ஆவணங்கள் மூலம் இந்திய குடியுரிமை பெற்ற இலங்கை தமிழர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மலைக்கோட்டை,
திருச்சி கரூர் பை-பாஸ் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பரமநாதன். தமிழரான இவர் இலங்கையில் பிறந்தவர். இவரது குடும்பத்தினர் இலங்கையில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 1984-ம் ஆண்டு பரமநாதன், தமிழகம் வந்தார். இவர் திருச்சி கரூர் பை-பாஸ் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இவர் போலி ஆவணங்கள் மூலம் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்டவையும், இந்திய குடியுரிமையும் பெற்றிருந்தார். இது தொடர்பான புகார் திருச்சி மாநகர போலீசாருக்கு வந்தது. இதையடுத்து கோட்டை போலீசார் விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார். அதன்படி பரமநாதன் மீது கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story