திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் குண்டும்-குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் குண்டும்-குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர்,
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பின்னலாடை நிறுவனங்கள் ஏராளமானவை செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். பின்னலாடை நிறுவனங்களில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஜாப் ஒர்க் செய்ய ஆடைகள் அனுப்பப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.
இதனால் வாகன போக்குவரத்து திருப்பூரில் அதிகமாக இருந்து வருகிறது. முக்கியமான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதனை சரி செய்ய போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் திருப்பூரின் முக்கிய சாலையான யூனியன் மில் ரோட்டில் சாலைகள் குண்டும்-குழியுமாக சாலைகள் உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
திருப்பூரின் முக்கிய சாலையாக யூனியன் மில் ரோடு இருந்து வந்து கொண்டிருக்கிறது. தினமும் இந்த சாலையை ஏராளமானவர்கள் பயன்படுத்தி வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த சாலை பல்வேறு பகுதிகளில் குண்டும்-குழியுமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறார்கள்.
பலர் இரவு நேரங்களில் விபத்தில் சிக்கி காயம் அடைந்து வந்து கொண்டிருக்கிறார்கள். எனவே மாநகராட்சி நிர்வாகம் இந்த சாலையை சீரமைக்க வேண்டும். வாகன ஓட்டிகள் எந்த சிரமமும் இன்றி பயணம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Related Tags :
Next Story