மகுடஞ்சாவடி அருகே மர்ம காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை பலி


மகுடஞ்சாவடி அருகே மர்ம காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 23 Sept 2019 4:15 AM IST (Updated: 23 Sept 2019 2:42 AM IST)
t-max-icont-min-icon

மகுடஞ்சாவடி அருகே மர்ம காய்ச்சலுக்கு 2½ வயது குழந்தை பலியானது.

இளம்பிள்ளை,

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள கன்னந்தேரி கிராமம் மோட்டுகாட்டானூர் பகுதியை சேந்தவர் மணிகண்டன், புகைப்பட கலைஞர். இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர்களின் மகன் சபரி (வயது 2½).

இந்த குழந்தைக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தையை பெற்றோர் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

குழந்தை சாவு

இந்த நிலையில் காய்ச்சல் குணமாகாமல் தீவிரம் அடையவே மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தையை சேர்த்தனர். அங்கு அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்து விட்டது. மர்ம காய்ச்சலுக்கு குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story