கல்லல் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் - திருப்புவனத்தில் நாளை மின்தடை


கல்லல் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம் - திருப்புவனத்தில் நாளை மின்தடை
x
தினத்தந்தி 23 Sept 2019 3:45 AM IST (Updated: 23 Sept 2019 4:02 AM IST)
t-max-icont-min-icon

கல்லல் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தப்படு கிறது. அதேபோல நாளை திருப்புவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

கல்லல், 

கல்லல் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (திங்கட் கிழமை) நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்களின் விவரம் வருமாறு:- கல்லல், தேவப்பட்டு, செவரகோட்டை, மருங்கிபட்டி, ஆலம்பட்டு, வெற்றியூர், சாத்தரசன்பட்டி, மாதவராயன்பட்டி.

செம்பனூர், பாகனேரி, நடராஜபுரம், பனங்குடி, கவுரிப்பட்டி, அரண்மனை சிறுவயல், பொய்யாமணிப்பட்டி, சொக்கநாதபுரம், கீழகோட்டை, பட்டமங்களம், கண்டரமாணிக்கம், கம்பனூர், நாச்சியாபுரம், ஆலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது என்று கல்லல் துணை மின்நிலைய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

திருப்புவனம் நெல்முடிகரையில் உள்ள துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, திருப்புவனம், லாடனேந்தல், தூதை, திருப்பாச்சேத்தி, மாரநாடு, கொத்தங்குளம், மேலசொரிக்குளம், முதுவன்திடல், டி.பாப்பா குளம், பிரம்மனூர்.

பழையனூர், வயல்சேரி, கீழராங்கியம், அல்லிநகரம், மேலராங்கியம், கலியந்தூர், மாங்குடி, அம்பலத்தாடி, மேல வெள்ளூர், பொட்டப்பாளையம், பாட்டம், கொந்தகை, கீழடி, மணலூர், மடப்புரம், பூவந்தி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என்று சிவகங்கை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

Next Story