ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகே, பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது


ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகே, பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 Sept 2019 3:45 AM IST (Updated: 23 Sept 2019 4:02 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் புதிய பஸ்நிலையம் அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் அருகே உள்ள உத்தரவை பகுதியை சேர்ந்தவர் செல்லச்சாமி மனைவி ராணி (வயது 45). இவர் ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு கடையில் வியாபாரம் முடிந்ததும் கடையை மூடிவிட்டு உள்பகுதியில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்.

தூங்கும் முன்பு தனது கழுத்தில் கிடந்த 1½ பவுன் நகையை தலையணையின் அடியில் வைத்துவிட்டு தூங்கினார். நேற்று அதிகாலையில் 2 பேர் கடைக்குள் நுழைந்து தலையணைக்கு அடியில் இருந்த சங்கிலியை எடுத்துக்கொண்டு செல்ல முயன்றனர்.

அப்போது திடீரென கண்விழித்து பார்த்த ராணி அவர்களை தடுக்க முயன்றார். ஆனால் நகையை பறித்துக் கொண்ட 2 பேரும் ராணியை கீழே தள்ளிவிட்டு தப்பி ஓட முயன்றனர்.

அப்போது ராணி சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் தொண்டி கிழக்குத்தெரு அமானுல்லா மகன் கான்அப்துல் கபர்க ான் (வயது 43), தொண்டி தாரகன் தெருவை சேர்ந்த முகமது சாகிப் மகன் ராவுத்தர் நைனா முகமது(44) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story