கூடலூரில், தூக்குப்போட்டு டெய்லர் தற்கொலை


கூடலூரில், தூக்குப்போட்டு டெய்லர் தற்கொலை
x
தினத்தந்தி 24 Sept 2019 3:30 AM IST (Updated: 23 Sept 2019 10:35 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் தூக்குப்போட்டு டெய்லர் தற்கொலை செய்து கொண்டார்.

கூடலூர், 

கூடலூர் அருகே மேல்கூடலூர் ஓ.வி.எச். சாலை பகுதியை சேர்ந்தவர் திருச்செல்வம்(வயது 47). இவர் அதே பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் திருச்செல்வம் வழக்கம் போல் கடைக்கு வந்தார். ஆனால் இரவு வீடு திரும்பவில்லை. உடனே அவரை குடும்பத்தினர் செல்போனில் பலமுறை தொடர்பு கொண்டனர். ஆனால் திருச்செல்வம் செல்போனை எடுத்து பேசவில்லை.

இதனால் இரவு 9½ மணிக்கு திருச்செல்வத்தை தேடி அவரது குடும்பத்தினர் கடைக்கு வந்தனர். அப்போது கடைக்குள் தூக்கில் தொங்கியவாறு திருச்செல்வம் பிணமாக இருந்தார். இதை கண்ட அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். மேலும் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கூடலூர் போலீசார் விரைந்து வந்து திருச்செல்வத்தின் உடலை கைப்பற்றினர்.

பின்னர் உடலை பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

இதற்கிடையில் கடைக்குள் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர் எழுதிய கடிதம் சிக்கியது. ஆனால் அதில் எழுதி இருந்த விவரங்களை போலீசார் தெரிவிக்க மறுத்து விட்டனர். மேலும் முழு விசாரணை நடத்திய பின்னரே தகவல் வெளியிட முடியும் என தெரிவித்தனர். இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடைக்குள் டெய்லர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story