திருச்சி விமான நிலையத்தில் ரூ. 22 லட்சம் கடத்தல் தங்கச்சங்கிலிகள் பறிமுதல் 2 பேரிடம் விசாரணை


திருச்சி விமான நிலையத்தில் ரூ. 22 லட்சம் கடத்தல் தங்கச்சங்கிலிகள் பறிமுதல் 2 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 24 Sept 2019 4:30 AM IST (Updated: 24 Sept 2019 12:27 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கச்சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செம்பட்டு,

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா விமானம் வந்தது. அதில் வந்து இறங்கிய பயணிகளையும், அவர்களுடைய உடைமைகளையும் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 பயணிகள் தங்கள் உள்ளாடையில் மறைத்து 586 கிராம் எடை கொண்ட தங்கச்சங்கிலிகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணை

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர்கள் சென்னையை சேர்ந்த நாகூர் மீரான், முகமது அலீப் என்பதும், அவர்கள் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணம் செய்து தங்க நகைகளை கடத்தி வந்ததும் தெரியவந்தது. அவர்களிடம் இருந்து தங்கச்சங்கிலிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.22 லட்சத்து 6 ஆயிரம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக, அவர்கள் 2 பேரிடமும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story