மீனாட்சி அம்மன் கோவில் கல்வெட்டுகள் ஆய்வு; பழங்கால தகவல்கள் கண்டுபிடிப்பு
மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகள் குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
மதுரை,
தமிழகத்தில் உள்ள சைவ திருத்தலங்களில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் உள்ள சுந்தரேசுவரர் சுவாமி, சுயம்பு லிங்கமாக தோன்றியவர். மேலும் இந்த கோவிலை பற்றி 6-ம் நூற்றாண்டில் பாடல் பாடியதாக கூறப்படுகிறது. எனவே 6-ம் நூற்றாண்டில் மீனாட்சி அம்மன் கோவில் இருந்ததாக தெரியவருகிறது.
மீனாட்சி அம்மன் கோவிலில் பல்வேறு இடங்களில் கல்வெட்டுகள் உள்ளன. அதனை ஆய்வு செய்வதன் மூலம் கோவிலை பற்றிய முழுமையான வரலாற்றை தெரிந்து கொள்ள முடியும் என்று கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி தமிழக தொல்லியல்துறை முன்னாள் உதவி இயக்குனர் சாந்தலிங்கம் மூலம் அதனை ஆய்வு செய்து அதன் முடிவுகளை அவர் மூலம் புத்தகமாக வெளியிட கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி சாந்தலிங்கம் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவினர் நேற்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் சுவாமி சன்னதி சனீஸ்வரர் சன்னதிக்கு எதிரே சுவர்களில் இருந்த கல்வெட்டுகளை ஆய்வு செய்தனர். பின்னர் அந்த கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளை மை படி(அச்சு) எடுத்து அதன் மூலம் அதில் இடம் பெற்றிருந்த தகவல்களை சாந்தலிங்கம் வாசித்தார். அதில் திரிகோண சக்கரவர்த்தி, கோனேர் இன்மைகொண்டார் ஆலவாய் உடையார் நாயனாருக்கு என்று ஒரு நிலத்தை கோவிலுக்கு தானமாக வழங்கிய ஆவணம் என்பதை அவர் வாசித்து காண்பித்தார்.
இது குறித்து தொல்லியல்துறை உதவி இயக்குனர் சாந்தலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் இடம் பெற்றிருக்கும் தகவல்களை அறிய அந்த கல்வெட்டுகளை மை படி எடுக்கும் பணி தொடங்கியுள்ளது. மை படி என்பது கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகளை பழைய காலத்தில் உள்ளது போன்று ஒரு காகிதத்தில் படி எடுப்பதன் மூலம் அதில் உள்ள எழுத்துகள் அனைத்தும் காகிதத்தில் பதிந்து விடும். அந்த காகிதத்தில் பதிவான விவரங்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் அந்த காகிதத்தை புகைப்படம் எடுத்து அதை பெரிதாக்குவதன் மூலம் எளிதாக படிக்க முடியும். மேலும் அந்த கல்வெட்டில் இடம் பெற்றுள்ளவற்றை வரி, வரியாக தெளிவாக எழுதி வெளியிட உள்ளோம். இந்த கல்வெட்டுகள் அனைத்தையும் 3 மாதங்களில் படி எடுத்து ஆவணப்படுத்தி, அதில் உள்ள விவரங்களை 6 மாதத்திற்குள் புத்தகமாக வெளியிட உள்ளோம். இது வரலாற்று மாணவர்களுக்கும், பக்தர்களுக்கும் வரலாற்றை தெரிந்து கொள்ள பயன்படும்.
இதற்கு முன்னர் ஆங்கிலேயர் காலத்தில் 1935-36, 1941-42-ம் ஆண்டில் இந்த கோவிலில் உள்ள 60-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளின் படி எடுக்கப்பட்டு மைசூருவில் உள்ளது. அதில் கல்வெட்டில் இருப்பதை ஆங்கில குறிப்புகளாக தெரிவிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசின் கணக்கீட்டின் படி 66 ஆவணங்கள் பதிவு செய்துள்ளது. அதன்பின்னர் இந்த கல்வெட்டுகளை யாரும் படி எடுக்கவில்லை. சுமார் 75 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தான் அந்த கல்வெட்டுகளை படி எடுக்கிறோம்.
கிழக்கு கோபுரத்தில் உள்ள கல்வெட்டில் 1190-1216-ம் ஆண்டில் சடைய வர்மகுலசேகர பாண்டிய மன்னனால் இந்த கோபுரம் கட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று 19-ம் நூற்றாண்டில் பச்சையப்ப முதலியார் என்பவர் சமஸ்கிருதம், ஆங்கிலம் படிக்க ஒரு லட்சம் வராகன் இனமாக கொடுத்தது குறித்த விவர கல்வெட்டுகள் உள்ளன.
மேலும் இங்குள்ள கல்வெட்டுகள் அனைத்தும் 13-ம் நூற்றாண்டு காலத்தை சேர்ந்தவை. அப்போது வாழ்ந்த பிற்கால பாண்டிய மன்னர்கள் காலத்தில் தமிழ் எழுத்துகளில் இந்த கல்வெட்டுகள் உள்ளன. அப்போது தமிழ் எழுத்துகள் இடையே கிரந்தம் என்ற எழுத்தை பயன்படுத்தியுள்ளனர். மேலும் மீனாட்சி அம்மன் கோவில் பெயரை தொடக்கத்தில் உள்ள கல்வெட்டுகளில் ஆலவாய் உடைய நாயனார் கோவில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தேவார பாடல் பாடிய காலத்தில் ஆலவாய் சொக்கர் என்று தெரிவித்துள்ளனர். மேலும் திருஞானசம்பந்தர் ஆலவாய் நம்பி என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆலவாய் என்பது இந்த கோவில் அமைந்துள்ள பகுதியின் பெயர். ஆலவாய் என்ற இந்த பகுதிக்கு உரிமையாளர், உடையார் என்பது தான் பொருத்தம். ஆலவாயினுடைய உடையார் என்று கல்வெட்டுகளில் சொல்லப்பட்டுள்ளது. அதன்பின்னர் தான் சமஸ்கிருத மொழியில் சுந்தரேசுவரர் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும் கல்வெட்டுகளில் வடசொற்கள் வரும் போது கிரந்தம் மொழியை இடைச் சொற்களாக புகுத்தி உள்ளனர். அந்த சொற்களை பயன்படுத்துவதை பெரும்பாலும் தவிர்த்துள்ளனர்.
இதன் மூலம் கடந்த 800 ஆண்டுகளில் என்ன விதமான பணிகள் நடந்து வந்துள்ளன. அவர்கள் கோவிலுக்கு கொடுத்த கொடைகள் என்ன காரணத்திற்காக கொடுக்கப்பட்டன. எந்தெந்த மன்னர்கள் இந்த கோவிலின் முன்னேற்றத்திற்காக உழைத்து உள்ளனர். அவர்களுக்கு உதவியாக இருந்த குறுநில மன்னர்கள் யார்?. இந்த வட்டாரத்தில் உள்ள செல்வந்தர்கள் யார்? அவர்கள் என்ன செய்தார்கள் என்ற வரலாற்றை மிக துல்லியமாக கொடுக்க முடியும் என்பதற்காக தான் இந்த பணியை நாங்கள் எடுத்துள்ளோம். இதற்கு மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனரின் முழு அனுமதியை பெற்று இந்த பணியை தொடங்கி உள்ளோம். மேலும் இங்குள்ள பெரும்பான்மையான கல்வெட்டு ஆவணங்கள் இந்த கோவிலுக்கு கொடுக்கப்பட்ட கொடைகள் தான் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் நடராஜன் உடனிருந்தார்.

Related Tags :
Next Story