இரும்புக் கம்பியில் மோதி சட்டக்கல்லூரி மாணவர்- இளம்பெண் சாவு; மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரிதாபம்


இரும்புக் கம்பியில் மோதி சட்டக்கல்லூரி மாணவர்- இளம்பெண் சாவு; மோட்டார் சைக்கிளில் சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 24 Sept 2019 4:15 AM IST (Updated: 24 Sept 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் இரும்புக் கம்பியில் மோதியதில் சட்டக்கல்லூரி மாணவர் மற்றும் இளம்பெண் பரிதாபமாக செத்தனர்.

புதுச்சேரி,

புதுவை வேல்ராம்பட்டு திருமகள் நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பத்மாவதி. இவரது மகன் சுரேந்தர் (வயது 20). இவர் சென்னை சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவில் மோட்டார் சைக்கிளில் லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த திலாசுபேட்டை விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த கிஷோர்குமார் மனைவி விண்ணரசி (வயது 30) லிப்ட் கேட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றார். சிவாஜி சிலை அருகே வந்தபோது சுரேந்தரின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி அருகில் சாலையோரம் இருந்த டிரான்ஸ்பார்மரின் இரும்புக் கம்பியில் மோதி சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் தலையில் அடிபட்டு இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து காய மடைந்து கிடந்த இருவரையும் மீட்டு ஒரு ஆட்டோவில் ஏற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த பரிதாப சாவு குறித்து கோரிமேடு போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story