குமரியில் சாலை விதிகளை மீறிய 2,102 பேர் மீது வழக்கு தலைமறைவாக இருந்த 17 பேர் பிடிபட்டனர்


குமரியில் சாலை விதிகளை மீறிய 2,102 பேர் மீது வழக்கு தலைமறைவாக இருந்த 17 பேர் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 23 Sep 2019 10:15 PM GMT (Updated: 23 Sep 2019 8:19 PM GMT)

குமரியில் சாலை விதிகளை மீறிய 2,102 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த 17 பேர் பிடிபட்டனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கட்டாய ஹெல்மெட் சட்டம் தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் பகல்- இரவாக போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது ஹெல்மெட் அணியாமல், குடித்து விட்டு வாகனம் ஓட்டியது என சாலை விதிகளை கடைப்பிடிக்காதவர்களை மடக்கி பிடித்தனர்.

அந்த வகையில் நாகர்கோவில் போலீஸ் துணை சரகத்தில் 438 பேர், தக்கலை துணை சரகத்தில் 446 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,102 பேர் பிடிபட்டனர். பின்னர் அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர்.

17 பேர் பிடிபட்டனர்

இதே போல கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருப்பவர்களையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்காக அந்தந்த போலீஸ் நிலையங்களில் உள்ள தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த 17 பேரை போலீசார் பிடித்தனர். இவர்கள் மீது அடி-தடி வழக்குகள், கொலை மிரட்டல் வழக்குகள் உள்ளன. 

Next Story