பெண் போலீசிடம் செல்போன் பறிப்பு 3 வாலிபர்கள் கைது
வேலூரில் பெண் போலீசிடம் செல்போனை பறித்துச்சென்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்,
வேலூர் வள்ளலாரில் வசித்து வருபவர் அஞ்சலி (வயது 27). காவேரிப்பாக்கத்தையடுத்த அவளூர் போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வந்த இவர் தற்போது வேலூரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் சம்பவத்தன்று இரவு பணிமுடிந்ததும் 7 மணியளவில் வீட்டுக்கு ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு போன்வந்ததால் வள்ளலாரில் சர்வீஸ் ரோட்டின் ஓரத்தில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு போனில் பேசிக்கொண்டிருந்தார்.
செல்போன் பறிப்பு
அப்போது 3 வாலிபர்கள் மோட்டார்சைக்கிளில் வந்துள்ளனர். அவர்கள் திடீரென்று பெண்போலீஸ் அஞ்சலி பேசிக்கொண்டிருந்த செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.
இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸ்நிலையத்தில் அஞ்சலி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, செல்போனை பறித்து சென்றதாக வேலூர் ஓல்டுடவுனை சேர்ந்த வசந்தகுமார் (22), குப்பு என்கிற அப்பு (29), ராகுல் (19) ஆகிய 3 பேரை கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Tags :
Next Story