திருச்செந்தூர், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் பி.எட்., எம்.எட். வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி 1995-ம் ஆண்டு முதல் இளங்கலை கல்வியியல் (பி.எட்.) படிப்புடன் இயங்கி வருகிறது. இருபாலரும் படிக்கும் இந்த கல்லூரி தேசிய தரமதிப்பீட்டு குழுவின் பி-பிளஸ் சான்று பெற்ற நிறுவனம் ஆகும். 2007-ம் ஆண்டு முதல் எம்.எட். வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது.
இந்த கல்லூரியில் இளங்கலை கல்வியியலில் (பி.எட்.), கணிதம், பொருளியல், உயிரறிவியல் (தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், பிளான்ட் பயாலஜி, பயோ டெக்னாலஜி), பொருளறிவியல், வணிகவியல் பாடப்பிரிவுகளும், முதுநிலை கல்வியியலும் (எம்.எட்.) கற்றுத் தரப்படுகின்றது.
பி.எட். மற்றும் எம்.எட். வகுப்புகளுக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். திறமை வாய்ந்த பேராசிரியர் குழு, தரமிக்க நூலக வசதி, அறிவியல், உளவியியல், கல்வி நுட்பவியல், கணினி ஆய்வகங்கள், வீடியோ வசதியுடன் கூடிய நுண்ணியல் கற்பித்தல் பயிற்சி வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கு வங்கியில் கல்விக்கடன் வசதி செய்து தரப்படுகிறது. பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள தரம் வாய்ந்த பல்வேறு கல்வி நிறுவனங்கள் நடத்திடும் வளாக தேர்வு மூலம் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தி கொடுக்கப்படும். இருபாலருக்கும் தனித்தனியாக விடுதி வசதி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாணவர்களின் தனித்திறமையை வளர்த்திட இசை மற்றும் நடன பயிற்சி, பல்வேறு கைவினை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி, யோகா மற்றும் உடற்கல்வி பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் ஆசிரியர் தேர்வுக்கான டெட் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
பி.எட். வகுப்பில் கணிதம், பொருளியல், உயிரறிவியல், பொருளறிவியல் மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளில் மற்றும் எம்.எட். வகுப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று கொண்டிருக்கிறது. பொறியியல் பட்டப்படிப்பு படித்த மாணவ-மாணவிகளும் பி.எட். படிக்க விண்ணப்பிக்கலாம். கல்லூரியில் பி.எட் மற்றும் எம்.எட் வகுப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் உடனடியாக 04639-242181, 220577 என்ற தொலைபேசி எண்களிலும், 94863 81123 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாணவர்கள் சேர்க்கைக்கான கடைசி நாள் வருகிற 30-ந் தேதியாகும்.
இந்த தகவலை, திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story