பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடியுடன் கூட்டணி வைக்க விருப்பம்; அஜித் பவார் கூறுகிறார்


பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடியுடன் கூட்டணி வைக்க விருப்பம்; அஜித் பவார் கூறுகிறார்
x
தினத்தந்தி 24 Sept 2019 5:22 AM IST (Updated: 24 Sept 2019 5:22 AM IST)
t-max-icont-min-icon

பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடியுடன் கூட்டணி வைக்க தேசியவாத காங்கிரஸ் ஆர்வமாக உள்ளது என அஜித்பவார் கூறினார்.

புனே, 

மராட்டியத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பிரகாஷ் அம்பேத்கர் தலைமையில் வஞ்சித் பகுஜன் அகாடி என்ற புதிய கூட்டணி உருவானது. இதில் ஐதராபாத் தொகுதி எம்.பி. அசாதுதீன் ஒவைசியின் எம்.ஐ.எம். கட்சியும் இணைந்தது.

3-வது அணியாக உரு வெடுத்த இந்த கூட்டணி பல தொகுதிகளில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் மராட்டிய சட்டமன்ற தேர்தலில் தொகுதி உடன்பாடு ஏற்படாததால் எம்.ஐ.எம். கட்சி வஞ்சித் பகுஜன் அகாடி கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் அஜித்பவார் நேற்று கூறியதாவது:-

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வஞ்சித் பகுஜன் அகாடி கூட்டணி ஏற்பட்டது. இதன் காரணமாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மற்றும் வஞ்சித் பகுஜன் அகாடி கூட்டணி இரண்டும் இழப்புகளை சந்தித்தன.

நாங்கள் ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சித்து வருகிறோம். மேலும் வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்புகிறோம்.

புனே நகரில் மொத்தம் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட் டியிடும். மீதமுள்ள ஒரு தொகுதி குறித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story