பள்ளி மாணவியை கடத்தி சென்ற ஆட்டோ டிரைவர் குண்டர் சட்டத்தில் கைது


பள்ளி மாணவியை கடத்தி சென்ற ஆட்டோ டிரைவர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 25 Sept 2019 4:00 AM IST (Updated: 24 Sept 2019 10:51 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவியை கடத்தி சென்ற ஆட்டோ டிரைவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை,

சிவகங்கை இந்திரா நகரை சேர்ந்தவர் முத்துசெல்வம் (வயது 34). ஆட்டோ டிரைவரான, இவரது ஆட்டோவில் சிவகங்கையை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தினமும் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். 10-ம் வகுப்பு படித்த இந்த சிறுமியை முத்துசெல்வம் கடந்த மார்ச் மாதம் கடத்தி சென்று விட்டார்.

இதுதொடர்பாக அந்த சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். சிறுமி கடத்தப்பட்டு 5 மாதத்திற்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் முத்துசெல்வம் நாமக்கல் அருகில் உள்ள செவந்திபட்டி என்ற கிராமத்தில் சிறுமியுடன் தங்கி இருந்து, ஒரு மில்லில் வேலை பார்த்து வருவது தெரிந்தது.

அதைத்தொடர்ந்து சிறுமியை கடத்தி சென்ற முத்துசெல்வத்தை சிவகங்கை நகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் கைது செய்யப்பட்ட முத்துசெல்வத்தை குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் கலெக்டர் ஜெயகாந்தனுக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டதை தொடர்ந்து முத்துசெல்வம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story