உடுமலை அருகே பி.ஏ.பி.கால்வாயின் குறுக்கே 2 இடங்களில் பாலம் கட்டும் பணி தீவிரம்; கரைகள் சீரமைக்கப்படுகின்றன
உடுமலை அருகே பெரிய கோட்டை ஊராட்சி பகுதியில் பி.ஏ.பி.கால்வாயின் குறுக்கே 2 இடங்களில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகிறது. அத்துடன் பி.ஏ.பி. உடுமலை கால்வாய் கரையில் சீரமைப்பு பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
உடுமலை,
பரம்பிக்குளம் -ஆழியாறு பாசன திட்டத்தில் காண்டூர் கால்வாய் மூலம் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் திருப்பூர்,கோவை மாவட்டங்களில் மொத்தம் 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த பாசன பகுதிகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு ஒரு மண்டலம் வீதம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த பாசனத்திட்டத்தில் 4-வது மண்டல பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
இதைத்தொடர்ந்து உடுமலை-பழனி தேசிய நெடுஞ்சாலையில் வெஞ்சமடை பகுதியில் பி.ஏ.பி. உடுமலை கால்வாய் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதேபோன்று ராயல்லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் கால்வாய் கரைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. வெஞ்சமடை, எஸ்.வி.புரம் உள்ளிட்ட இடங்களில் பி.ஏ.பி.கால்வாயில் இருந்த மண் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யும் பணிகளும் நடந்து வருகிறது. இந்த கால்வாய் கரைகள் சீரமைப்பு மற்றும் கால்வாயை சுத்தம் செய்யும் பணிகள் பி.ஏ.பி.பொதுப்பணித்துறையின் சார்பில் நடந்து வருகிறது.
இந்தநிலையில் வெஞ்சமடையில் இருந்துசிவலிங்கம்பிள்ளை லே-அவுட், தாராபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வழியில் சுந்தர் நகர் பகுதியிலும்,யு.கே.பி.நகர் அருகிலும் பி.ஏ.பி கால்வாயின் குறுக்கே இருந்த பழுதடைந்த 2 பாலங்கள் அகற்றப்பட்டு அந்த இடங்களில் புதிய பாலம் கட்டும் பணிகள்தொடங்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பி.ஏ.பி.கால்வாயின் குறுக்கே கட்டப்படும்இந்த 2 பாலங்களும் உடுமலை ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து பெரியகோட்டைஊராட்சியின் சார்பில் கட்டப்பட்டு வருகின்றன.இந்த கட்டுமானப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த பாலங்கள் வழியாக வேன்,கார், இருசக்கர வாகனங்கள் சென்று வரும். தற்போது அங்கு புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருவதால் அந்த இடத்திற்கு அருகில் தற்காலிக மண்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story