இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்; மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் கலெக்டர் ஆய்வு
காமராஜ் நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) அர்ஜூன் சர்மா ஆய்வு செய்தார்.
புதுச்சேரி,
புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 21-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 24-ந் தேதி நடக்கிறது. இதில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை வைப்பதற்கான பாதுகாப்பு அறை மற்றும் வாக்கு எண்ணிக்கையை எங்கு நடத்துவது என்று முடிவு செய்ய புதுவை மாவட்ட கலெக்டரும் (பொறுப்பு), தேர்தல் அதிகாரியுமான அர்ஜூன் சர்மா நேற்று மாலை லாஸ்பேட்டை அரசு பெண்கள் பாலிடெக்னிக், மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது சப்-கலெக் டர்கள் சக்திவேல், சுதாகர், தேர்தல் நடத்தும் அதிகாரியும், சுற்றுலாத்துறை இயக்குனருமான முகமது மன்சூர், உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி, செய்தி மற்றும் விளம்பர துறை இயக்குனர் வினயராஜ் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
இந்த ஆய்வின் போது மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்க பாதுகாப்பு அறை மற்றும் வாக்கு எண்ணிக்கை மையம் அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி அர்ஜூன் சர்மா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த அதிகாரிகள் தங்கள் துறையின் மூலமாக மேற்கொள்ள வேண்டிய பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இங்கு வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாப்பாக வைக்க பாதுகாப்பு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும். இதற்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு அறைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story