அரவக்குறிச்சி பகுதியில் தொடர் மழை: தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது

அரவக்குறிச்சி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தொகுப்பு வீடு ஒன்று இடிந்து விழுந்தது.
அரவக்குறிச்சி,
தமிழகத்தில் தற்போது பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது. அதேபோல, கரூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அரவக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட நல்லிகவுண்டனூர் அருகே காட்டூர் காலனியில் கடந்த சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் இலவசமாக தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.
அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. அதேபோல காட்டூர் பகுதியிலும் பலத்த மழை பெய்தது.
தொகுப்பு வீடு இடிந்தது
கன மழையின் காரணமாக தங்கராஜ் (வயது 49) என்பவருக்கு சொந்தமான தொகுப்பு வீடு நேற்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது.அந்த வீட்டில் வசித்தவர்கள் நேற்று முன்தினம் இரவு அருகில் உள்ள வீட்டில் படுத்து தூங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Related Tags :
Next Story