கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டிட தொழிலாளர்கள் தர்ணா


கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டிட தொழிலாளர்கள் தர்ணா
x
தினத்தந்தி 25 Sept 2019 4:00 AM IST (Updated: 25 Sept 2019 2:28 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்ட தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.

கரூர்,

கரூர் மாவட்ட தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணைத்தலைவர் வடிவேலன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் கந்தசாமி, மாவட்ட துணை செயலாளர் சாத்தப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்டுமான தொழிலாளர்கள் போராடி பெற்ற கட்டுமான தொழிலாளர் பாதுகாப்பு சட்டமும், நலவரி சட்டமும் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு விட்டது. இதன் விளைவாக யூனியன் பிரதேசங்கள் உள்பட 36 மாநிலங்களில் செயல்பட்டு வந்த கட்டுமான தொழிலாளர் நலவாரியங்கள் காலாவதியாக்கப்படுகிறது. இதனால், அதில் பதிவு பெற்ற 4 கோடி கட்டுமான தொழிலாளர்களின் வாரிய பதிவுகள் ரத்தாகும் நிலை உள்ளது. இதுபோன்ற நடவடிக்கையினை மத்திய அரசு கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிரான புதிய சட்ட திருத்தங்களை திரும்ப பெற வேண்டும். நாடு முழுவதும் கட்டுமான தொழிலாளர் நலவாரியங்களில் உள்ள ரூ.40 ஆயிரம் கோடி நலநிதி இருப்பினை மத்திய அரசு தனது நிதி தேவைகளுக்கு எடுத்து கொள்ளும் முடிவினை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ரத்தினம், மாவட்ட பொருளாளர் கலாராணி உள்பட கட்டுமான தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story